Showing posts with label women. Show all posts
Showing posts with label women. Show all posts

Sunday, July 6, 2008

கண்களில் கருவளையம் நீங்க...

கண்களில் கருவளையம் நீங்க...

* தூக்கமின்மை,அனீனியா,பாரம்பரியம்,கண்களுக்கு அதிக வேலைப்பளு,டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது.இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கரட், பீற்றுட்ஜீஸ்,கீரைவகைகளை, பப்பாளி, மாம்பழம்
போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், உப்புக்கலக்காத எண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் எடுத்து கண்களின் உள்ளே போய்விடாதபடி சுண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும்.

* விட்டமின் ஏ,விட்டமின் கேப்சூல்களில் உள்ள எண்ணெயை கண்களை சுற்றித்தடவி பத்து நிமிடம் போனதும் பஞ்சினால்துடையுங்கள்.

*கற்றாழையின் சோற்றுப்பகுதியை,பன்னீருடன் கலந்து கண்களுக்கடியில் தடவி 10 நிமிடத்துக்கு பிறகு கழுவலாம்.

* விளக்கெண்ணைய்யை கண்களின் மீது தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

டிப்ஸ்.. டிப்ஸ்.. டிப்ஸ்..!

கையில் சூடான எண்ணெய் பட்டுவிட்டதா, எரிச்சலாக இருக்கிறதா, இதோ கொஞ்சம் பற்பசை பிதுக்கி எரிச்சலாக இருக்கும் இடத்தில் தடவுங்கள், நிமிடத்தில் உங்கள் எரிச்சல் நின்று குளு குளு என்று இருக்கும். பற்பசை வைத்தால் 
கொப்பளம் ஏற்படாது. 

காலில் போடும் கொலுசு கறுத்து விட்டதா, கவலை வேண்டாம், கொஞ்சம் விபூதி வைத்து தேய்த்து பருத்தி துணியால் துடைத்து பாருங்கள், பள பள என்று இருக்கும், 

பட்டுபுடவை வைக்கும் இடத்தில் கூடவே ஒரு துண்டு வசம்பை வையுங்கள். 
பட்டுபுடவையை வெகுநாட்கள் பாதுகாப்பாக இருக்கும்

வீட்டை துடைக்கப்போறீங்களா, கொஞ்சம் நில்லுங்கள் துடைக்க பயன்படுத்தும் 
தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து துடையுங்கள், வீட்டில் பூச்சி, ஈ, 
அண்டாது, தரையும் பளிச்சென்று நம்மை பார்த்து சிரிக்கும். 

பாத்திரம் தேய்க்கும் இடத்தில் தண்ணீர் போகும் துவாரத்தில் கரப்பான்பூச்சி 
குடும்பத்தோடு வசிக்கும், அதை போக்க இதோ கொதிக்கும் தண்ணீரில் கற்பூரம் தூள் செய்து போட்டு அந்த துவாரத்தில் விடுங்கள், கொஞ்ச நேரத்தில் எல்லாம் 
செத்துவிடும். மீண்டும் வரவே வராது. 

இரவு படுக்க போகும் முன் புருவத்தில் கொஞ்சம் விளக்கெண்ணெய் 
தேய்த்துக்கொண்டு படுங்கள், இப்படி செய்தால் புருவம் அடர்த்தி ஆகும், முடியும் 
உதிராது. 

வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு போட்டு உங்கள் பாதங்களை அதில் கொஞ்ச நேரம் வைத்து எடுங்கள், இப்படி செய்தால் வலியும் போகும், பித்த வெடிப்பும் மறையும்.